இடுகைகள்

வலி கவிதை, pain kavithai

பிரசவத்தின் வலி  பிள்ளையின்  முகம் பார்த்து  அமைதியாகிறது..... குழந்தைகளின் வலி பெற்றோர்களின்  சண்டைகளில்  ஆரம்பமாகிறது.... ஆணின் வலி  தனக்கான  அங்கீகாரத்தை அடைய போராடுகிறது..... தனிமையின் வலி  வாழ்க்கையை  உணர வைக்கிறது.... இழப்பின் வலி  மன இறுக்கத்தை உண்டுபண்ணுகிறது.... காதலின் வலி  கை கூடுமோ  என்று  கலங்கி நிற்கிறது.... தேடலின் வலி  தொலைக்கும் போது ஆரம்பமாகிறது..... வறுமையின் வலி  வாழ்க்கையை  வெறுக்க  வைக்கிறது..... முதியோர்களின் வலி கவனிப்பாரின்றி  கண்ணீர்  வடிக்கின்றது..... அவமானத்தின் வலி  அடுத்தவர்  முன்னிலையில்  அரங்கேறுகிறது.... நட்பின் வலி  துரோகத்தின் போது  துண்டாகிறது..... தம்பதியர்களின் வலி  புரிதலின்றி  பிரிந்து செல்கின்றது.... கருணையின் வலி  உதவி கரம்  நீட்டுகிறது.... உழைப்பின் வலி  வாழ்க்கையில்  உன்னை  உயர வைக்கிறது...... உளி படும் சிற்பி  சிலையாவது  உண்மையென்றால்..... வலிப்படும்  உன் வாழ்க்கை உன்னை ...

கொரோனா கவிதை

கொன்று குவிக்கும்  கொரோனாவுக்கு  கோபம்  என்ன வந்ததோ.... ஒருவேளை .... ஒருவேளை.... மரத்தையெல்லாம்  அழித்துதுவிட்டோம்  மனசாட்சி இல்லாமல்  நடந்து விட்டோம்  என்ற கோபமோ..... சாதி மதம்  பார்த்து விட்டோம்  சமத்துவத்தை  மறந்து விட்டோம்  என்ற ஆதங்கமோ.... கருணை இல்லாமல் நடந்துவிட்டோம்  யானையின் வயிற்றில்  வெடியை  வைத்து  கொன்று விட்டோம்  என்ற வேகமோ.... நீரை சேமிக்க  மறந்துவிட்டோம்  நெகிழியை பயன்படுத்தி  நிலத்தடி நீரை  தடுத்து விட்டோம்  என்ற வெறுப்போ.... ஆணவக்கொலை  செய்துவிட்டோம் ... அந்த ஆண்டவனுக்கே அஞ்சுவதற்கு  மறந்து விட்டோம்  என்ற ஆக்ரோஷமோ... பாலியல்  வன்கொடுமைக்கு  பச்சிளம் குழந்தையெல்லாம் பலியான  பயங்கரம் தான்  காரணமோ..... அரசு சம்பளம் வாங்கியும் ஏழைகளிடம்  மனசாட்சி இல்லாமல்  லஞ்சம் வாங்கியதற்கான தண்டனையோ... சுத்தத்தை கைவிட்டோம் சுகாதாரத்தை  காக்க மறந்து விட்டோம்  என்ற நினைவு படுத்த தான்  இந்த சூழ்ச்சியோ...  ரசாயனம் இல்லாத உண...

முதியோர் இல்லம் கவிதை

என்  அன்பு மகனே  நீ என்னை விட்டு சென்ற  முதியோர் இல்லத்தில்  உன் மகன்  உன்னை விட்டு விடக் கூடாது  என்பதே  என் வேண்டுதலடா.....   நீ என் கருவயிற்றில் எட்டி உதைத்த போது கூட சந்தோஷமாய் உன்னை தொட்டு ரசித்தவள் இன்று நீ உதைக்காமலே  வலிக்கிறதடா முதியோர் இல்லத்தில்... பிள்ளை வரம் வேண்டி கோயிலுக்கு சென்றநாள் நினைவுக்கு வந்ததடா.... நீ என்னை முதியோர் இல்லத்தில்  விட்டு சென்றவுடன்.... நீ விட்டு சென்ற  முதியோர் இல்லத்தின்  வழியை  வலியோடு பார்க்கிறேன்  மீண்டும் நம் வீட்டிற்கே  என்னை  இட்டு செல்வாயா என்று... என் அன்பு நெஞ்சங்களே.. உயிருள்ள பிரம்மன்  பெற்றோர்களே...  ஆதலால்,  கல்லை  வணங்குவதைவிட  கருவறையில் சுமந்த  பெற்றோரை  வணங்குங்கள்.... பிறந்த குழந்தையும்  இறக்கும்  தருவாயில் இருக்கும்  பெற்றோர்களும் ஒன்றுதானே முதியோர்களை  குழந்தையாக பாவியுங்கள்... இன்று அவர்கள்  நாளை நாம்  மனதில் நிறுத்துங்கள் முதியோர்களை  மனம் கோணாமல்  பார்த்துக் கொள்ளுங்கள்.... ...

ஒரு காதல் மனைவியின் எதிர்பார்ப்புகள்... கவிதை , என் அன்பு கணவனே,

என்  அன்பு  கணவனே... உங்கள்  அன்பு  என்மீது  ஆயுள் வரை  குறையக் கூடாது... என்  நினைவுகளை தவிர உன் நெஞ்சத்தில்  வேறு எதுவும்  நிறைய கூடாது... நாம் கொண்ட  ஊடல் எதுவும்  நொடி நேரம்  நலைக்க கூடாது... உறவுகள்  உனக்கு ஆயிரம் இருப்பினும்  உன் உயிர்  நான் என்பதை  மறக்கக்கூடாது... நமக்குள் ரகசியம்  என்றுமே  இருக்கக் கூடாது.. எப்போதும்  நீ என்னிடம்  பொய்  உரைக்க கூடாது.... உன் முதல் குழந்தை  நான் என்பதை  நாம்  மண்ணிற்குள் போகும் வரை  நீ மறக்க கூடாது.. என்  கண்ணீரை விட  உன் கரங்கள்  முந்திக் கொண்டு  துடைக்க வேண்டும்... தங்கம்  இருக்கும் இடத்தை விட  நீ தங்கி இருக்கும் இடமே  எனக்கு  சொர்க்கம் என்பதால், நொடிப்பொழுதும்  என்னை நீ  பிரிய கூடாது... வருடங்கள் சென்றாலும்  வயதாகி போனாலும்  நம் அன்பு மட்டும்  என்றும்  இளமையாகவே  இருக்க வேண்டும்.... என்  மரணம் கூட  உன் மடியில் தான்  நிகழ வேண்டும்.....

நட்பு கவிதை

மகிழ்ச்சியை  கொண்டுவரும்  மழலைப் பருவ  நட்பே... பின்னாளில்  பளிச்சென்று  சிரிக்க வைக்கும்  பள்ளிப்பருவ  நட்பே..... என்றும்  இணைபிரியாமல்  இருக்க நினைக்கும்  இளமைப்பருவ  நட்பே.... கண்ணீரை  வரவழைக்கும்  கல்லூரி பருவம்  நட்பே.... சில  பயணங்களில் வரும்  பல தரப்பட்ட  நட்பே.... எந்த  நட்பாக  இருந்தாலும்..... நட்பு என்ற  பாலத்தில் தானே  நாளும் நாம் பயணம் செய்கிறோம்.... தகுதி பார்த்து  தரம் பிரிக்கும்  சில  உறவைவிட... அன்பை மட்டுமே  தகுதியைக் கொண்டு  ஆயுள் வரை  பயணிக்கும் நட்பு  சிறந்தது அல்லவா... கண்ணீர் தரும்  உறவுகளை விட  கண்ணீர் துடைக்கும்  நட்பு உயர்ந்ததல்லவா.. நட்பு என்றாலே  கெத்து தான்  நல்ல நண்பர்கள்  வாழ்க்கையில்  மிகப் பெரிய  சொத்து தான்... நட்பையும்  நண்பர்களையும்  நேசிக்கும்  ஒவ்வொருவருக்கும்  இக்கவிதை  சமர்ப்பணம்..... இக்கவிதையை  வீடியோவாக  காண  கீழே உள்ள  லிங்...

மௌனம் கவிதை

மௌனத்தை விட  சிறந்த  மொழி இல்லை... உன் மௌனத்தையும்  ஒருவரால் மொழிபெயர்க்க  முடியும் என்றால்  அந்த உறவுக்கு  நிகர் எதுவுமில்லை.... கோபத்தில்  வரும்  மௌனம்  இனி பேசுவதில்  அர்த்தமில்லையென்று  விலகிச் செல்கிறது.... சந்தோஷத்தில் வரும்  மௌனம்  இனிய நினைவுகளை மனதில் அசை போடுகிறது...... விதத்தில் வரும்  மௌனம்  பக்தி நிறைந்தது.... ஊமையின் மௌனம்  பேச ஆசை இருந்தும்  வாய்ப்பற்று போகுது.... தோல்வியில் வரும்  மௌனம்  மீண்டும் எழ முடியாமல்  துவண்டு போகிறது.... ஏழையின் மௌனம்  விடியல் வருமென  அமைதியில் முழ்குது... மற்றவர்களை  காயப்படுத்த மனமில்லாமல் அமைதிகாக்கும்  ஒவ்வொரு மௌனமும்  அழகானதே....... ----------- இக்கவிதையை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்------ 👇👇👇👇👇 https://yhttp://tamilkavithaigalkk.blogspot.com/outu.be/FEpCmXHPBPw