கொரோனா கவிதை

கொன்று குவிக்கும்
 கொரோனாவுக்கு 
கோபம் 
என்ன வந்ததோ....

ஒருவேளை ....
ஒருவேளை....

மரத்தையெல்லாம் 
அழித்துதுவிட்டோம்
 மனசாட்சி இல்லாமல் 
நடந்து விட்டோம் 
என்ற கோபமோ.....

சாதி மதம் 
பார்த்து விட்டோம் 
சமத்துவத்தை 
மறந்து விட்டோம் 
என்ற ஆதங்கமோ....

கருணை இல்லாமல் நடந்துவிட்டோம் 
யானையின் வயிற்றில் 
வெடியை வைத்து
 கொன்று விட்டோம் 
என்ற வேகமோ....

நீரை சேமிக்க
 மறந்துவிட்டோம்
 நெகிழியை பயன்படுத்தி
 நிலத்தடி நீரை 
தடுத்து விட்டோம் 
என்ற வெறுப்போ....

ஆணவக்கொலை 
செய்துவிட்டோம் ...
அந்த ஆண்டவனுக்கே அஞ்சுவதற்கு 
மறந்து விட்டோம் 
என்ற ஆக்ரோஷமோ...

பாலியல்
 வன்கொடுமைக்கு
 பச்சிளம் குழந்தையெல்லாம் பலியான 
பயங்கரம் தான் 
காரணமோ.....

அரசு சம்பளம் வாங்கியும் ஏழைகளிடம் 
மனசாட்சி இல்லாமல் 
லஞ்சம் வாங்கியதற்கான தண்டனையோ...

சுத்தத்தை கைவிட்டோம் சுகாதாரத்தை 
காக்க மறந்து விட்டோம்
 என்ற நினைவு படுத்த தான் 
இந்த சூழ்ச்சியோ... 

ரசாயனம் இல்லாத உணவே சிறந்தது 
என்று 
காட்டுவதற்கு தான் 
இந்த
கொரானாவின்
 கபசுரக் குடிநீரோ....

போதும் கொரோனா
இத்தோடு நிறுத்தி விடு
 உன் 
பரவலை 
தடுத்துவிடு...

மனிதர்களை 
மன்னித்து விடு 
அவர்கள் 
மனம் திறந்த 
வாய்ப்பு கொடு....

மருத்துவ
கடவுளை வணங்கிடுவோம்
 அவர்கள் 
மகத்தான தொழிலை போற்றிடுவோம்....

செவிலியர்கள் 
சேவைகள் அளவற்றது 
அவர்கள்
 செய்யும் தொழில்
 எதற்கும் இணையற்றது...

உலகையே 
வலம் வரும் கொரோனா 
நம்மிடம் வராதிருக்க.....

முக கவசம்
 அணிந்திடுவோம்
 பிறரின் 
மூச்சுக் காற்று 
நம்மீது படாமல் 
நம்மை
காத்துக்கொள்வோம்.....

சமூக இடைவெளியை
 கடைபிடிப்போ
சமூக பரவல் நோயை தடுத்திடுவோம்.....

கொரோனாவால் 
இன்னுயிரை
 இழந்த
 அனைவருக்கும் 
ஆழ்ந்த இரங்கலை 
தெரிவிப்போம்....


கொரோனாவால் 
இன்னொரு உயிர் 
போகாமல் இருக்க
 நம்மை நாமே 
தனிமைப்படுத்தி 
பாதுகாத்துக் கொள்வோம்..

    __நன்றி___

இக்கவிதையை காணொளியாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
        👇👇👇

https://youtu.be/V36rSKJirmI


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாதி கவிதை

விதவையின் குரல் கவிதை

ஆணின் அருமை கவிதை