ஆணின் அருமை கவிதை
ஆண் என்ற
ஒற்றைச் சொல்
அனைத்து உறவுக்கும்
அடித்தளம் அல்லவா....
ஆணின்
துணை இல்லாமல்
பெண் சுதந்திரமாக
வெளியில் செல்வது
சிரமம் அல்லவா....
ஆணின்
சம்பாத்தியத்திலும் சாமர்த்தியத்திலும் தான் சந்தோஷமான குடும்பம்
அமையும் அல்லவா....
தான் கல்வியை
தொலைத்துவிட்டு
தம்பி தங்கை
கல்விக்காக
உழைக்கும்.....
எத்தனையோ
அண்ணன்கள்
வாழ்க்கையில்
என்றும்
மறக்கக் கூடாத
தெய்வம் அல்லவா...
தந்தையை
இழந்த குடும்பத்தில்
அண்ணன்
தந்தை ஸ்தானத்தில் நின்று
குடும்பத்தை
தாங்கும் போது
அவன் ஆண்டவனுக்கு
சமம் அல்லவா.....
ஆண்
ஒற்றை பிள்ளையாக
பிறந்தாளும்
வீட்டில்
ஐந்து பெண்களையும்
கட்டிக் கொடுக்கும் போது
அண்ணன் என்ற ஆண்
வீட்டில் எதர்க்கும்
நிகர் சொல்ல முடியாத
கடவுள் அல்லவா....
மகள்
இல்லாத வீட்டில்
மகனே
மகளாய்மாறி
அனைத்து வேலையும்
ஒரு தாய்க்கு
செய்து கொடுக்கும்போது
ஆண் சிறப்பல்லவா.....
ஆண் என்ற சொந்தம்
அழகாய்
சீர் சுமந்து வருகையிலே
ஆண் என்ற படைப்பு
இறைவன் கொடுத்த
வரம் அல்லவா....
கட்டிக்கொடுத்த தங்கை
கண் கசிக்கு
வந்து நின்றால்....
தட்டிக்கேட்க
அண்ணன் வருகையில்
தனி நிகர்
ஏதும் உண்டா....
மாமன் என்ற சொந்தம்
மண்ணிற்குள்
போகும்போதும்
மண்ணில் மேல்
வாழும் போதும்....
ஆண்
மதிப்புமிக்க
உறவல்லவா.....
பட்டாம்பூச்சியாய்
பறந்த
எத்தனையோ ஆண்கள்
இன்று
பிள்ளைகள் என்ற
பாச வலைக்குள்
மட்டுமே
சூழ்ண்டு நிற்கின்றனர்....
படித்த
எத்தனையோ
ஆண்களுக்குப்
பிடித்த வேலை
கிடைக்கவில்லை
என்றாலும்
குடும்பத்திற்காக
கூலி வேலை செய்யும்
மதிப்புமிக்க
ஆண்களை
தலை வணங்கி
வாழ்த்த
வேண்டுமல்லவா...
தான் கண்ட
கனவை தொலைத்து
பெற்றோர் கொண்ட
லட்சியத்திற்காக
உழைக்கும் ஆன்
மதிப்புமிக்க
வரமல்லவா...
கஷ்டப்பட்டு வளர்ந்த
எத்தனையோ
ஆண்கள்
தன் பிள்ளைகளை
கஷ்டமில்லாமல் தானே
வளர்க்க
ஆசைப்படுகின்றனர்.....
பெண் இல்லாமல்
உலகம் இல்லை
ஆண் இல்லாமல்
பெண் இல்லை.....
மதிப்பு மிக்க
ஒவ்வொரு ஆணுக்கும்
இக்கவிதை
சமர்ப்பணம்....
~~~~~~~நன்றி~~~~~~
இக்கவிதையை காணொளியாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇
https://youtu.be/lQGuEt0fm38
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem