சாதி கவிதை
சாகும்போது
அனைவருமே
சாம்பலாகத்தான்
ஆகுறோம்...
வாழும்போது சாதியை
எரித்து
சந்தோசமா
வாழ்வோம்.....
சாதி ஒழிப்பு
தலைவர்கள் எல்லாம்
சமூக ஒற்றுமைக்கு
பாடுபட்டார்கள்.....
மனித சாதி
ஒன்று போதும் என்று
மண்ணில்
உயிரை விட்டார்கள்....
உயிர்
இருக்கும் வரை தானே
உடம்பு....
உயிர் பிரிந்தால்
நாமெல்லாம்
பிணம்தானே.....
பிணமாய்
போகும் உயிருக்கு
சாதி என்ற
சாயம் எதற்கு???.....
சாதிக்காக
கத்தி
சண்டை போடுறோமே
குத்தும் கத்திக்கு
சாதி உண்டா???.....
சிந்தும்
இரத்தத்துக்குத்தான்
நிறம் வேறுண்டா
வலி கூட அனைவருக்கும்
பொதுதானே ......
உயிரைக்
கொன்று குவிக்கும்
கொரானாகூட
சாதி பார்த்தா
சாகடிக்குது????.....
இந்த வாழ்க்கை
அனைவருக்கும்
சமமானது என்ற
கருத்தை தானே
சொல்லுது.......
எனவே,
மதத்தால்
வேறுபடுவோம்
மனதால்
ஒன்றுபடுவோம்....
இனத்தால்
வேறுபடுவோம்
இதயத்தால்
ஒன்றுபடுவோம்.....
கடவுளால்
வேறுபடுவோம்
காலத்தால்
ஒன்றுபடுவோம்....
சாதி மதம் இல்லாத
சமூகத்தை உருவாக்கி
சந்தோஷமாய்
வாழ்வோம்......
~~~~~நன்றி~~~~
இக்கவிதையை காணொளியாக காண கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்யவும்👇👇👇👇
https://youtu.be/I171wZpHIs4
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem