இடுகைகள்

vali லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வலி கவிதை, pain kavithai

பிரசவத்தின் வலி  பிள்ளையின்  முகம் பார்த்து  அமைதியாகிறது..... குழந்தைகளின் வலி பெற்றோர்களின்  சண்டைகளில்  ஆரம்பமாகிறது.... ஆணின் வலி  தனக்கான  அங்கீகாரத்தை அடைய போராடுகிறது..... தனிமையின் வலி  வாழ்க்கையை  உணர வைக்கிறது.... இழப்பின் வலி  மன இறுக்கத்தை உண்டுபண்ணுகிறது.... காதலின் வலி  கை கூடுமோ  என்று  கலங்கி நிற்கிறது.... தேடலின் வலி  தொலைக்கும் போது ஆரம்பமாகிறது..... வறுமையின் வலி  வாழ்க்கையை  வெறுக்க  வைக்கிறது..... முதியோர்களின் வலி கவனிப்பாரின்றி  கண்ணீர்  வடிக்கின்றது..... அவமானத்தின் வலி  அடுத்தவர்  முன்னிலையில்  அரங்கேறுகிறது.... நட்பின் வலி  துரோகத்தின் போது  துண்டாகிறது..... தம்பதியர்களின் வலி  புரிதலின்றி  பிரிந்து செல்கின்றது.... கருணையின் வலி  உதவி கரம்  நீட்டுகிறது.... உழைப்பின் வலி  வாழ்க்கையில்  உன்னை  உயர வைக்கிறது...... உளி படும் சிற்பி  சிலையாவது  உண்மையென்றால்..... வலிப்படும்  உன் வாழ்க்கை உன்னை ...