இடுகைகள்

kavithai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண் குழந்தை.

பூக்களெல்லாம்  தோற்குதடி - அவள்  புன்னகையில் கூட  வாசம் வீசுதடி...... ஏழு ஜென்மம் தவமடி  என்  வீட்டுப்பெண் குழந்தை  தவழும் இடமடி.......  மகள் என்ற  ஒற்றைச் சொல்லுக்குள்  மனக்கவலை  அனைத்தும்தீருமடி.... அவள்  கொஞ்சம் பேசும் அழகில்  குலதெய்வம்   வந்து போகுமடி..... என் மகள்  விழித்து பார்க்கும்  அழகினில்  விழிகள் மூட  மறுக்குதடி..... அவள்  அப்பட்டமான மொழிகளில்  ஆண்டவன் வாழும்  காட்சியடி..... பெண் குழந்தைகளின்  பெருமைகளை  சொல்லி தீருமா?..... இரு  பெண் குழந்தைகள்  இருக்கும் வீட்டில்  அக்கா  தங்கைக்கு தாயய் மாறுவது அருமையடி..... அன்பின் அகராதி பெண் குழந்தை அவள்  இல்லையெனில்  அகிலமே இல்லையடி.... மனித உறவின்  பரிசடி  அவள் இல்லையெனில் தரணியெல்லாம்  தரிசடி.... தாயில்லாத  தகப்பனுக்கு  மகளே  தாயாய் மாறுவது  அருமையடி..... பெண்  குழந்தை  பிறக்கும் போது  தெரியாத அருமை பெற்றோருக்கு,  அவர்களின்  வயோதிக ...

நட்பு கவிதை

மகிழ்ச்சியை  கொண்டுவரும்  மழலைப் பருவ  நட்பே... பின்னாளில்  பளிச்சென்று  சிரிக்க வைக்கும்  பள்ளிப்பருவ  நட்பே..... என்றும்  இணைபிரியாமல்  இருக்க நினைக்கும்  இளமைப்பருவ  நட்பே.... கண்ணீரை  வரவழைக்கும்  கல்லூரி பருவம்  நட்பே.... சில  பயணங்களில் வரும்  பல தரப்பட்ட  நட்பே.... எந்த  நட்பாக  இருந்தாலும்..... நட்பு என்ற  பாலத்தில் தானே  நாளும் நாம் பயணம் செய்கிறோம்.... தகுதி பார்த்து  தரம் பிரிக்கும்  சில  உறவைவிட... அன்பை மட்டுமே  தகுதியைக் கொண்டு  ஆயுள் வரை  பயணிக்கும் நட்பு  சிறந்தது அல்லவா... கண்ணீர் தரும்  உறவுகளை விட  கண்ணீர் துடைக்கும்  நட்பு உயர்ந்ததல்லவா.. நட்பு என்றாலே  கெத்து தான்  நல்ல நண்பர்கள்  வாழ்க்கையில்  மிகப் பெரிய  சொத்து தான்... நட்பையும்  நண்பர்களையும்  நேசிக்கும்  ஒவ்வொருவருக்கும்  இக்கவிதை  சமர்ப்பணம்..... இக்கவிதையை  வீடியோவாக  காண  கீழே உள்ள  லிங்...