நட்பு கவிதை
மகிழ்ச்சியை
கொண்டுவரும்
மழலைப் பருவ
நட்பே...
பின்னாளில்
பளிச்சென்று
சிரிக்க வைக்கும்
பள்ளிப்பருவ
நட்பே.....
என்றும்
இணைபிரியாமல்
இருக்க நினைக்கும்
இளமைப்பருவ
நட்பே....
கண்ணீரை
வரவழைக்கும்
கல்லூரி பருவம்
நட்பே....
சில
பயணங்களில் வரும்
பல தரப்பட்ட
நட்பே....
எந்த
நட்பாக
இருந்தாலும்.....
நட்பு என்ற
பாலத்தில் தானே
நாளும் நாம்
பயணம் செய்கிறோம்....
தகுதி பார்த்து
தரம் பிரிக்கும்
சில
உறவைவிட...
அன்பை மட்டுமே
தகுதியைக் கொண்டு
ஆயுள் வரை
பயணிக்கும் நட்பு
சிறந்தது அல்லவா...
கண்ணீர் தரும்
உறவுகளை விட
கண்ணீர் துடைக்கும்
நட்பு உயர்ந்ததல்லவா..
நட்பு என்றாலே
கெத்து தான்
நல்ல நண்பர்கள்
வாழ்க்கையில்
மிகப் பெரிய
சொத்து தான்...
நட்பையும்
நண்பர்களையும்
நேசிக்கும்
ஒவ்வொருவருக்கும்
இக்கவிதை
சமர்ப்பணம்.....
இக்கவிதையை
வீடியோவாக காண கீழே உள்ள
லிங்கை கிளிக் செய்யவும்
👇👇👇
https://youtu.be/HgG3_0v3NVA
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem