விதவையின் குரல் கவிதை
விரும்பி வாங்கிய
பட்டமில்லையே
என் விதவை
வாழ்க்கை....
வேண்டாம் என்று
கெஞ்சினாலும்
விடவில்லை
விதி என்
மண வாழ்க்கையை...
உடன்கட்டை மட்டும்
உடன் இருந்திருந்தால்
உடனேயே
சென்றிருப்பேன்...
என்ன செய்வது...,
என் உயிரை விட
மேலான குழந்தைகள்
இருப்பதினால்
உயிரையும் விட
இயலவில்லைல்லை...
மறுமனம்
செய்துக்கொள்ள
மனதளவில்
என்
மண வாழ்க்கை
இன்னும்
முடியவில்லை....
இச்சமூகத்தின்
இழி சொல்லுக்கு பயந்து
என் பூவையும்
பொட்டையும்
இளமையிலேயே
எரிந்துவிட்டேன்....
என்னை
இச்சையோடு
பார்ப்பவர்களை
வார்த்தையாலும்
கண்களாலும்
விரித்து விட்டேன்.....
என் அன்பு சமூகமே....
சடங்குகளும்
சம்பிரதாயங்களும்
மனிதர்களால்
உருவாக்கப்பட்டவை தானே
பிறப்பில் இருந்து
வந்த பூவையும்
பொட்டையும் யாரும்
பறிக்க வேண்டாமே..
கண்ணியத்துடன்
வாழ நினைக்கும்
விதைவை தாய்க்கு
நாமும் கொஞ்சம்
கரம் கொடுப்போமே
ஆதலால்
விதைவைக்கு
குரல் கொடுப்போம்....
அவர்கள் மீதான
விமர்சனங்களை
தகர்த்தெறிவோம்...
விசேஷ நாட்களில்
அவர்களையும்
வரவேற்று
வாழத்த
இடம் கொடுப்போம்....
குழந்தைக்காக
வாழ்க்கையை
அர்பணித்து வாழும்
ஒவ்வொரு
விதைவை தாய்க்கும்
இக்கவிதை
சமர்ப்பணம்.....
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem