பெண் குழந்தை.
பூக்களெல்லாம் தோற்குதடி - அவள் புன்னகையில் கூட வாசம் வீசுதடி...... ஏழு ஜென்மம் தவமடி என் வீட்டுப்பெண் குழந்தை தவழும் இடமடி....... மகள் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மனக்கவலை அனைத்தும்தீருமடி.... அவள் கொஞ்சம் பேசும் அழகில் குலதெய்வம் வந்து போகுமடி..... என் மகள் விழித்து பார்க்கும் அழகினில் விழிகள் மூட மறுக்குதடி..... அவள் அப்பட்டமான மொழிகளில் ஆண்டவன் வாழும் காட்சியடி..... பெண் குழந்தைகளின் பெருமைகளை சொல்லி தீருமா?..... இரு பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அக்கா தங்கைக்கு தாயய் மாறுவது அருமையடி..... அன்பின் அகராதி பெண் குழந்தை அவள் இல்லையெனில் அகிலமே இல்லையடி.... மனித உறவின் பரிசடி அவள் இல்லையெனில் தரணியெல்லாம் தரிசடி.... தாயில்லாத தகப்பனுக்கு மகளே தாயாய் மாறுவது அருமையடி..... பெண் குழந்தை பிறக்கும் போது தெரியாத அருமை பெற்றோருக்கு, அவர்களின் வயோதிக ...