பெண் குழந்தை.
பூக்களெல்லாம்
தோற்குதடி - அவள்
புன்னகையில் கூட
வாசம் வீசுதடி......
ஏழு ஜென்மம் தவமடி
என்
வீட்டுப்பெண் குழந்தை
தவழும் இடமடி.......
மகள் என்ற
ஒற்றைச் சொல்லுக்குள்
மனக்கவலை
அனைத்தும்தீருமடி....
அவள்
கொஞ்சம் பேசும் அழகில்
குலதெய்வம்
வந்து போகுமடி.....
என் மகள்
விழித்து பார்க்கும்
அழகினில்
விழிகள் மூட
மறுக்குதடி.....
அவள்
அப்பட்டமான மொழிகளில்
ஆண்டவன் வாழும்
காட்சியடி.....
பெண் குழந்தைகளின்
பெருமைகளை
சொல்லி தீருமா?.....
இரு
பெண் குழந்தைகள்
இருக்கும் வீட்டில்
அக்கா
தங்கைக்கு தாயய் மாறுவது அருமையடி.....
அன்பின்
அகராதி
பெண் குழந்தை
அவள்
இல்லையெனில்
அகிலமே இல்லையடி....
மனித உறவின்
பரிசடி
அவள் இல்லையெனில் தரணியெல்லாம்
தரிசடி....
தாயில்லாத
தகப்பனுக்கு
மகளே
தாயாய் மாறுவது
அருமையடி.....
பெண் குழந்தை
பிறக்கும் போது
தெரியாத அருமை
பெற்றோருக்கு,
அவர்களின்
வயோதிக காலத்தில்
நிச்சயம்
அறிவார்கள்......
பெண் குழந்தை
பெற்ற பெற்றோருக்கு
அனாதை இல்லம்
தேவை இல்லையாடி...
ஆண் மகனின்
அன்பு
அடுத்த வீட்டுப் பெண்
வந்தால் மாறலாமடி.....
பெண் மகளின்
அன்பு
அடுத்த வீட்டுக்கு
சென்ற பின்
இரட்டிப்பாக
மாற்றமடையுமடி.....
அனைத்து உறவுக்கும் அடிப்படையானவள்
அவளின் தியாகங்கள்
எதர்க்கு
இனை சொல்ல
முடியுமடி.....
வீட்டில்
இனிய நாளோ
இல்லை
துயரமான நாளோ
பெண் இல்லாமல்
முழுமையாகதடி.....
மகள் பிறக்கும்
வீட்டில்
மகிழ்ச்சியாக சொல்லுங்கள்
மகாலட்சுமி
வந்து விட்டாலென்று....
ஆண்டவன்
வரம் கொடுத்தால்
ஆண் குழந்தை....
அந்த
ஆண்டவனே
வரமாக வந்தால்
அதுதான்
பெண் குழந்தை....
பெண் குழந்தை
என்னும் இறைவனை
வரமாக வாங்கிய
அனைவருக்கும்
இக் கவிதை
சமர்ப்பணம்.....
இக்கவிதையை காணொளியாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇
https://youtu.be/87pC39fKEUY
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem