வலி கவிதை, pain kavithai
பிரசவத்தின் வலி
பிள்ளையின்
முகம் பார்த்து
அமைதியாகிறது.....
குழந்தைகளின் வலி
பெற்றோர்களின்
சண்டைகளில்
ஆரம்பமாகிறது....
ஆணின் வலி
தனக்கான
அங்கீகாரத்தை அடைய போராடுகிறது.....
தனிமையின் வலி
வாழ்க்கையை
உணர வைக்கிறது....
இழப்பின் வலி
மன இறுக்கத்தை உண்டுபண்ணுகிறது....
காதலின் வலி
கை கூடுமோ
என்று
கலங்கி நிற்கிறது....
தேடலின் வலி
தொலைக்கும் போது ஆரம்பமாகிறது.....
வறுமையின் வலி
வாழ்க்கையை
வெறுக்க
வைக்கிறது.....
முதியோர்களின் வலி கவனிப்பாரின்றி
கண்ணீர்
வடிக்கின்றது.....
அவமானத்தின் வலி
அடுத்தவர்
முன்னிலையில்
அரங்கேறுகிறது....
நட்பின் வலி
துரோகத்தின் போது
துண்டாகிறது.....
தம்பதியர்களின் வலி
புரிதலின்றி
பிரிந்து செல்கின்றது....
கருணையின் வலி
உதவி கரம்
நீட்டுகிறது....
உழைப்பின் வலி
வாழ்க்கையில்
உன்னை
உயர வைக்கிறது......
உளி படும் சிற்பி
சிலையாவது
உண்மையென்றால்.....
வலிப்படும்
உன் வாழ்க்கை
உன்னை
வழிநடத்த போவதும்
உண்மையே.....
ஆறுதலை விட
வலியே சிறந்தது
ஏன் தெரியுமா....
ஆறுதல் சொல்லவும்
அறிவுரை கூறவும்
ஆயிரம் பேர் வருவார்கள்
யாரும் உன்னை
வழி
நடத்தப் போவதில்லை....
உடலின் வலி
வேண்டுமானால்
உன்னை
உடைய செய்யலாம்
ஆனால்
மனதின் வலி
நிச்சயம் உன்னை
எழச் செய்யும்......
வரலாற்றில்
இடம்பிடித்தவர்கள்
அத்தனை பேருமே
வாழ்க்கையில் வலிபட்டு வந்தவர்கள் தான்.....
ஆகவே,
வலி படு
அழுவதற்கு அல்ல
மீண்டும் எழுவதற்கு....
வரலாற்றில்
உனக்காக ஒரு இடம் காத்திருக்கிறது
உன் பெயர் பதிக்க...
வாழ்க்கையில்
சாதிக்க நினைக்கும்
ஒவ்வொருவருக்கும்
இக்கவிதை
சமர்ப்பணம்....
~~~~நன்றி~~~~
இக்கவிதையை
காணொளியாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
👇👇👇👇
https://youtu.be/Ldjm5wWpK7g
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem