முதியோர் இல்லம் கவிதை
என்
அன்பு மகனே
நீ என்னை விட்டு சென்ற
முதியோர் இல்லத்தில்
உன் மகன்
உன்னை விட்டு விடக் கூடாது
என்பதே
என் வேண்டுதலடா.....
நீ என் கருவயிற்றில்
எட்டி உதைத்த போது கூட
சந்தோஷமாய் உன்னை
தொட்டு ரசித்தவள்
இன்று
நீ உதைக்காமலே
வலிக்கிறதடா
முதியோர் இல்லத்தில்...
பிள்ளை வரம் வேண்டி
கோயிலுக்கு சென்றநாள்
நினைவுக்கு வந்ததடா....
நீ என்னை
முதியோர் இல்லத்தில்
விட்டு சென்றவுடன்....
நீ விட்டு சென்ற
முதியோர் இல்லத்தின்
வழியை
வலியோடு பார்க்கிறேன்
மீண்டும் நம் வீட்டிற்கே
என்னை
இட்டு செல்வாயா என்று...
என் அன்பு நெஞ்சங்களே..
உயிருள்ள பிரம்மன்
பெற்றோர்களே...
ஆதலால்,
கல்லை
வணங்குவதைவிட
கருவறையில் சுமந்த
பெற்றோரை
வணங்குங்கள்....
பிறந்த குழந்தையும்
இறக்கும்
தருவாயில் இருக்கும்
பெற்றோர்களும் ஒன்றுதானே
முதியோர்களை
குழந்தையாக பாவியுங்கள்...
இன்று அவர்கள்
நாளை நாம்
மனதில் நிறுத்துங்கள்
முதியோர்களை
மனம் கோணாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்....
_நன்றி_
இக்கவிதையை காணொளியாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
👇👇👇
https://youtu.be/4JZ7yK5iOFQ
,
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem