ஒரு காதல் மனைவியின் எதிர்பார்ப்புகள்... கவிதை , என் அன்பு கணவனே,
என்
அன்பு
கணவனே...
உங்கள்
அன்பு என்மீது
ஆயுள் வரை
குறையக் கூடாது...
என்
நினைவுகளை தவிர உன் நெஞ்சத்தில்
வேறு எதுவும்
நிறைய கூடாது...
நாம் கொண்ட
ஊடல் எதுவும்
நொடி நேரம்
நலைக்க கூடாது...
உறவுகள்
உனக்கு ஆயிரம் இருப்பினும்
உன் உயிர்
நான் என்பதை
மறக்கக்கூடாது...
நமக்குள் ரகசியம்
என்றுமே
இருக்கக் கூடாது..
எப்போதும்
நீ என்னிடம்
பொய்
உரைக்க கூடாது....
உன் முதல் குழந்தை
நான் என்பதை
நாம்
மண்ணிற்குள் போகும் வரை
நீ மறக்க கூடாது..
என்
கண்ணீரை விட
உன் கரங்கள்
முந்திக் கொண்டு
துடைக்க வேண்டும்...
தங்கம்
இருக்கும் இடத்தை விட
நீ தங்கி இருக்கும் இடமே
எனக்கு
சொர்க்கம் என்பதால், நொடிப்பொழுதும்
என்னை நீ
பிரிய கூடாது...
வருடங்கள் சென்றாலும்
வயதாகி போனாலும்
நம் அன்பு மட்டும்
என்றும்
இளமையாகவே
இருக்க வேண்டும்....
என்
மரணம் கூட
உன் மடியில் தான்
நிகழ வேண்டும்....
என் மௌனங்கள்
உன் வார்த்தையாகவும்
உன் சொற்கள்
என் செயலாகவும்
இருக்க வேண்டும்...
உன் சுகமோ
சோகமோ
நாம் இருவரும்
இணைந்தே
செயல்பட வேண்டும்...
நீ இறக்கப்போகும்
ஒரு நொடிக்கு முன்பே
நான் இறந்திருக்க
வேண்டும்....
----- இக்கவிதையை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்------
👇👇👇
https://youtu.be/4RxQRL6DSDA
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem