மௌனம் கவிதை

மௌனத்தை விட 
சிறந்த 
மொழி இல்லை...

உன் மௌனத்தையும்
 ஒருவரால்
மொழிபெயர்க்க 
முடியும் என்றால் 
அந்த உறவுக்கு 
நிகர் எதுவுமில்லை....

கோபத்தில் வரும் 
மௌனம் 
இனி பேசுவதில் 
அர்த்தமில்லையென்று 
விலகிச் செல்கிறது....

சந்தோஷத்தில் வரும் 
மௌனம் 
இனிய நினைவுகளை மனதில் அசை போடுகிறது......

விதத்தில் வரும் 
மௌனம் 
பக்தி நிறைந்தது....

ஊமையின் மௌனம்
 பேச ஆசை இருந்தும்
 வாய்ப்பற்று போகுது....

தோல்வியில் வரும்
 மௌனம் 
மீண்டும் எழ முடியாமல் 
துவண்டு போகிறது....

ஏழையின் மௌனம்
 விடியல் வருமென 
அமைதியில் முழ்குது...

மற்றவர்களை 
காயப்படுத்த மனமில்லாமல் அமைதிகாக்கும்
 ஒவ்வொரு மௌனமும் 
அழகானதே.......

----------- இக்கவிதையை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்------
👇👇👇👇👇

https://yhttp://tamilkavithaigalkk.blogspot.com/outu.be/FEpCmXHPBPw

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாதி கவிதை

விதவையின் குரல் கவிதை

ஆணின் அருமை கவிதை