இடுகைகள்

விதவையின் குரல் கவிதை

விரும்பி வாங்கிய  பட்டமில்லையே என் விதவை  வாழ்க்கை....   வேண்டாம் என்று  கெஞ்சினாலும்  விடவில்லை  விதி என்  மண வாழ்க்கையை...  உடன்கட்டை மட்டும்  உடன் இருந்திருந்தால்  உடனேயே  சென்றிருப்பேன்... என்ன செய்வது..., என் உயிரை விட  மேலான குழந்தைகள்  இருப்பதினால்  உயிரையும் விட  இயலவில்லைல்லை. ..   மறுமனம் செய்துக்கொள்ள  மனதளவில்  என்  மண வாழ்க்கை இன்னும்  முடியவில்லை .... இச்சமூகத்தின்  இழி சொல்லுக்கு பயந்து  என் பூவையும்  பொட்டையும்  இளமையிலேயே  எரிந்துவிட்டேன்.. .. என்னை  இச்சையோடு  பார்ப்பவர்களை  வார்த்தையாலும்  கண்களாலும்  விரித்து விட்டேன்..... என் அன்பு சமூகமே.... சடங்குகளும்  சம்பிரதாயங்களும்  மனிதர்களால்  உருவாக்கப்பட்டவை தானே   பிறப்பில் இருந்து  வந்த பூவையும்  பொட்டையும் யாரும்  பறிக்க வேண்டாமே.. கண்ணியத்துடன்  வாழ நினைக்கும் விதைவை தாய்க்கு  நாமும் கொஞ்சம்  கரம் கொடுப்போமே ஆதலால் விதைவை...

சாதி கவிதை

சாகும்போது  அனைவருமே  சாம்பலாகத்தான்  ஆகு றோம்... வாழும்போது சாதியை எரித்து  சந்தோசமா  வாழ்வோம்..... சாதி ஒழிப்பு  தலைவர்கள் எல்லாம்  சமூக ஒற்றுமைக்கு  பாடுபட்டார்கள்..... மனித சாதி  ஒன்று போதும் என்று  மண்ணில்  உயிரை விட்டார்கள்.... உயிர்  இருக்கும் வரை தானே  உடம்பு....   உயிர் பிரிந்தால்  நாமெல்லாம்  பிணம்தானே..... பிணமாய்  போகும் உயிருக்கு  சாதி என்ற  சாயம் எதற்கு???..... சாதிக்காக  கத்தி  சண்டை போடுறோமே  குத்தும் கத்திக்கு  சாதி உண்டா???..... சிந்தும்  இரத்தத்துக்குத்தான் நிறம் வேறுண்டா  வலி கூட அனைவருக்கும் பொதுதானே ...... உயிரைக்  கொன்று குவிக்கும்   கொரானாகூட  சாதி பார்த்தா சாகடிக்குது????..... இந்த வாழ்க்கை  அனைவருக்கும்  சமமானது  என்ற  கருத்தை தானே  சொல்லுது....... எனவே,  மதத்தால்  வேறுபடுவோம்  மனதால்  ஒன்றுபடுவோம்.... இனத்தால்  வேறுபடுவோம் இதயத்தால்  ஒன்றுபடுவோம்.....  கடவுளால்...

Girl baby poem .

All the flowers  Defeat - she  Even with a smile .....  Seven Janmam Tawamadi  My  Housewife child  .......  Of daughter  Within a single word  Anxiety....  She  In a little talking beauty  family God  Come and go .....  My daughter  Awake  In beauty  Close your eyes  .....  She  In blatant languages  The Lord lives  The scene .....  Of baby girls  Pride  Can you tell? .....  Both  Girl children  Existing home  Sister  Becoming a mother to your sister is wonderful .....  Of love  Dictionary  baby girl  She  Otherwise  ....  Of the human relationship  Gift  She is otherwise Dharani  தரிசடி ....  Motherless  To the father  Daughter  Becoming a mother .....  baby girl  At birth  Awesome unknown  For parents,  Their  In old age  Surely ...

பெண் குழந்தை.

பூக்களெல்லாம்  தோற்குதடி - அவள்  புன்னகையில் கூட  வாசம் வீசுதடி...... ஏழு ஜென்மம் தவமடி  என்  வீட்டுப்பெண் குழந்தை  தவழும் இடமடி.......  மகள் என்ற  ஒற்றைச் சொல்லுக்குள்  மனக்கவலை  அனைத்தும்தீருமடி.... அவள்  கொஞ்சம் பேசும் அழகில்  குலதெய்வம்   வந்து போகுமடி..... என் மகள்  விழித்து பார்க்கும்  அழகினில்  விழிகள் மூட  மறுக்குதடி..... அவள்  அப்பட்டமான மொழிகளில்  ஆண்டவன் வாழும்  காட்சியடி..... பெண் குழந்தைகளின்  பெருமைகளை  சொல்லி தீருமா?..... இரு  பெண் குழந்தைகள்  இருக்கும் வீட்டில்  அக்கா  தங்கைக்கு தாயய் மாறுவது அருமையடி..... அன்பின் அகராதி பெண் குழந்தை அவள்  இல்லையெனில்  அகிலமே இல்லையடி.... மனித உறவின்  பரிசடி  அவள் இல்லையெனில் தரணியெல்லாம்  தரிசடி.... தாயில்லாத  தகப்பனுக்கு  மகளே  தாயாய் மாறுவது  அருமையடி..... பெண்  குழந்தை  பிறக்கும் போது  தெரியாத அருமை பெற்றோருக்கு,  அவர்களின்  வயோதிக ...

சிகரெட் கவிதை

உதட்டின் வழியே  புகையை  இழுக்கிறாய்.... உனக்கு நீயே  கொள்ளி  வைக்கிறாய்..... உன் நுரையீரல் எல்லாம்  கருகுகிறது  அதில உனக்கு  சுகம் கிடைக்கிறது.... நீ இழுக்கும் புகையில்  தொண்ணூறு சதவீதம்  நிக்கோட்டின்  உன் நுரையீரலை தொற்றி கொண்டிருக்கிறது...  புகைக்கும்போது எரிவது  நிக்கோட்டின்  சாம்பல் மட்டுமல்ல..... உன் நுரையீரல்  ஆயுள் காலத்தின்  அழிவு..... புகைப்பதால்  மனக்கவலை  குறையப்போவதில்லை...  ஆயுளை  குறைத்து கொண்டே போகிறது... ஆகவே புகைப்பதை  இன்றோடு நிறுத்திவிடு உன் இதயத்தை ஆரோக்கியமாய்  வாழ விடு.... அடுத்தவர் புகைக்க கொடுத்தால்  மறுத்துவிடு...... அடுத்தவருக்கும்  புகைப்பதின் தீமைகளை  விளக்கி சொல்லி விடு.... இனி  புகைக்க மாட்டேன்  என்று  உறுதி மொழி  எடுத்து விடு..... அந்தப் புண்ணியத்தை  உன் குடும்பத்திற்கு  சேர்த்துவிடு.... நீ புகைப்பிடித்தல்  மீதி நெருப்பில்  இயற்கை  மரமெல்லாம் எரிகிறது.... பொது இடத்தில்  புகை பிடிப்பதினால் ...

உறவுகள் கவிதை.

உயிரை  கொடுக்கும்  அளவிற்கு  உறவுகள்  இல்லாவிட்டாலும்..... நம்  கண்ணீரை விரும்பாத  உறவுகள் கிடைப்பது  இறைவன் கொடுத்த  வரம் தான்.. நம்  மனம் உடையும் போது  மடி சாய இடம் கொடுத்து மனநிறைவான  ஆறுதலைக் கொடுக்கும்  உறவு எப்போதும்  சிறப்புதான்..... நெருப்பு  போன்ற வார்த்தையை  மலையளவு கொட்டினாலும்  பனியாய் மறந்து  அடுத்த நொடியே  பேச கிடைக்கும்  உறவுகள் ஆண்டவன் கொடுத்த  அருள்தான்..... விட்டுக் கொடுத்துப் போகும் உறவுகள் கிடைப்பது  வாழ்க்கையில்  கோடி பணம்  கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத  சந்தோஷம் தான்..... பணம் பார்த்து  மதிப்பிடாமல்  ஒருவரின்  குணம் பார்த்து  மதிப்பிடும்  உறவு  கிடைப்பது  இம்மண்ணில் அரிதுதான்....... கொஞ்சி பேசும்  உறவுகளை விட  உரிமையோடு  கோபப்படும் உறவு  இனிமை தான்..... நமக்காகவும்  கண்ணீர் சிந்தும்  உறவு கிடைத்து விட்டால்  இந்த வாழ்க்கை  சொர்க்கம் தான்.... அன்பை  வார்த்தையால் சொல்லா...

ஆணின் அருமை கவிதை

ஆண் என்ற  ஒற்றைச் சொல்  அனைத்து உறவுக்கும்  அடித்தளம் அல்லவா.... ஆணின்  துணை இல்லாமல்  பெண் சுதந்திரமாக  வெளியில் செல்வது  சிரமம் அல்லவா.... ஆணின்  சம்பாத்தியத்திலும் சாமர்த்தியத்திலும் தான் சந்தோஷமா ன குடும்பம்  அமையும் அல்லவா.... தான்  கல்வியை  தொலைத்துவிட்டு  தம்பி தங்கை  கல்விக்காக  உழைக்கும்..... எத்தனையோ  அண்ணன்கள்  வாழ்க்கையில்  என்றும்  மறக்கக் கூடாத  தெய்வம் அல்லவா...  தந்தையை இழந்த குடும்பத்தில் அண்ணன்  தந்தை ஸ்தானத்தில் நின்று குடும்பத்தை  தாங்கும் போது  அவன் ஆண்டவனுக்கு  சமம் அல்லவா..... ஆண்    ஒற்றை பிள்ளையாக  பிறந்தாளும் வீட்டில்  ஐந்து பெண்களையும்  கட்டிக் கொடுக்கும் போது அண்ணன் என்ற ஆண் வீட்டில் எதர்க்கும்  நிகர் சொல்ல முடியாத  கடவுள் அல்லவா.... மகள்  இல்லாத வீட்டில்  மகனே  மகளாய்மாறி  அனைத்து வேலையும்  ஒரு தாய்க்கு  செய்து கொடுக்கும்போது  ஆண் சிறப்பல்லவா..... ஆண் என்ற சொந்தம்  அ...