உறவுகள் கவிதை.

உயிரை 
கொடுக்கும் அளவிற்கு 
உறவுகள்
 இல்லாவிட்டாலும்.....

நம்
 கண்ணீரை விரும்பாத
 உறவுகள் கிடைப்பது
 இறைவன் கொடுத்த
 வரம் தான்..

நம்
 மனம் உடையும் போது
 மடி சாய இடம் கொடுத்து மனநிறைவான 
ஆறுதலைக் கொடுக்கும்
 உறவு எப்போதும் 
சிறப்புதான்.....

நெருப்பு 
போன்ற வார்த்தையை 
மலையளவு கொட்டினாலும்
 பனியாய் மறந்து 
அடுத்த நொடியே 
பேச கிடைக்கும் 
உறவுகள்
ஆண்டவன் கொடுத்த 
அருள்தான்.....

விட்டுக் கொடுத்துப்போகும் உறவுகள் கிடைப்பது
 வாழ்க்கையில் 
கோடி பணம் 
கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத 
சந்தோஷம் தான்.....

பணம் பார்த்து 
மதிப்பிடாமல் 
ஒருவரின் 
குணம் பார்த்து
 மதிப்பிடும் 
உறவு கிடைப்பது 
இம்மண்ணில்
அரிதுதான்.......

கொஞ்சி பேசும்
 உறவுகளை விட 
உரிமையோடு 
கோபப்படும் உறவு 
இனிமை தான்.....

நமக்காகவும் 
கண்ணீர் சிந்தும் 
உறவு கிடைத்து விட்டால் 
இந்த வாழ்க்கை 
சொர்க்கம் தான்....

அன்பை 
வார்த்தையால் சொல்லாமல் செயலாள் உணர்த்தும் 
உறவுகள் கிடைப்பது 
கடவுள் 
கொடுத்த வரம் தான்.....

அன்பான உறவுகள்
கிடைக்கவும்
நிலைக்கவும்.....

உறவுகளிடம் 
நாம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறோமோ
 அதை எல்லாம் 
நாமும் கொடுப்போமே...

~~~நன்றி ~~~~~~

இக்கவிதையை காணொளியாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

https://youtu.be/JUNIsZkqdDM





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாதி கவிதை

விதவையின் குரல் கவிதை

ஆணின் அருமை கவிதை